அரியலூர்; மே 04,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சர்வாணிகா(9) இவர் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சதுரங்க விளையாட்டின் மீது உள்ள அதிக ஆர்வத்தின் காரணமாக மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், 2 முறை தேசிய சதுரங்க போட்டியிலும், ஆசிய சதுரங்க போட்டியிலும் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் பெற்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் ஏப்.25 முதல் 29-ம் தேதி வரை நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப்-2024 போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாடினார். போட்டியில் மொத்தம் 11 சுற்றுகளில் 9 -ல் வெற்றிகளைப் பெற்று தங்கம் பதக்கம் வென்றார்.
இதையடுத்து, உடையார்பாளையத்துக்கு சர்வாணிகா நேற்று திரும்பிய நிலையில், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், சிறுமி சர்வாணிகாவை அழைத்து பாராட்டினார். அப்போது, கோட்டாட்சியர் ஷீஜா, வட்டாட்சியர் கலிலூர்ரஹ்மான் உள்ளிட்ட உடனிருந்தனர்.