இந்தியா முழுவதும் தடையற்ற இணைய இணைப்பை வழங்கும் நோக்கில், 1,600 செயற்கைக்கோள்கள் மற்றும் 23 தரை நிலையங்களுடன் புதிய திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
6 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் தீவுகளுக்கு இணைய வசதி வழங்குவதே இதன் இலக்கு.
2030-க்குள் 400–450 செயற்கைக்கோள்களையும், 2035-க்குள் முழு 1,600 செயற்கைக்கோள் அமைப்பையும் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், இந்தியாவின் இணைய இணைப்புத் துறையில் புதிய மாற்றம் ஏற்படலாம்!



