தருமபுரி, செப்டம்பர் 05 –
தருமபுரி மாவட்டம் செம்மண்டகுப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி துவக்கி வைத்தார். இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர். மேலும் பட்டா மாற்றம், இலவச மனை பட்டா, முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து துறை சார்ந்த அலுவலர்கள் பெற்றனர்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு மனுதாரர்களுக்கு நல திட்ட உதவிகளை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார். மருத்துவ முகாமில் பொதுமக்கள் பிபி, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆகியவைகளை பரிசோதனை செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பிரபு ராஜசேகர், பேரூராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



