களியக்காவிளை, செப். 1 –
செங்கல் சிவபார்வதி கோயிலில் திருவோண பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. களியக்காவிளை அருகே உதியன்குளம்கரை செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம், வைகுண்டம், தேவ லோகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் ஏராளமான பத்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவோண பண்டிகையை முன்னிட்டு அத்தப்பூ இடுவது வழக்கம். அத்துடன் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் தலைமை அர்ச்சகர் குமார் தலைமை வகித்தார். கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கினார்.
நல உதவிகள் வழங்கும் விழாவில் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



