கோவை, ஆக. 18 –
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ரங்க சமுத்திரம் கிராமத்தை சார்ந்த பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி 2024 ன் சுயேட்சை வேட்பாளர் ச. காளிமுத்து அவர்களுக்கு “சுதந்திர ரத்னா விருது” சென்னையில் வழங்கப்பட்டது.
விருது வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் சுகாதார துறை அமைச்சர், முதல் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சராக நியமிக்கப்பட்ட டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழர் தன்னுரிமை கட்சியின் தலைவர் ஐயா
பாவலர் மு. இராமச்சந்திரன், உலக தமிழினப் பேரியக்கத்தின் கௌரவ தலைவர் ஐயா
தமிழண்ணன், அனைத்திந்திய தமிழ் சங்கத்தின் தலைவர் கலைமாமணி, சொல்லின் செல்வர் விருது பெற்ற ஐயா ஆவடி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதிலும் சுயேட்சை வேட்பாளர்களாக களம் கண்ட அனைவரையும் ஒன்று சேர்த்து 79 வது சுதந்திர தினத்தில் சுதந்திர ரத்னா விருது வழங்கிய கரு. சந்திரசேகர் அவர்களின் மூலம் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
விருது பற்றி சுயேட்சை வேட்பாளர் ச. காளிமுத்து கூறியதாவது: எனக்கு இந்த விருது வழங்கிய தமிழர் அடித்தளம் அறக்கட்டளையின் நிறுவனர் கரு. சந்திரசேகர் அவர்களுக்கும் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்த தலைவர்கள் மற்றும் கோவையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அண்ணன் ஏ. நூர் முகமது அவர்களுக்கும் என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் ஸ்ரீ நான் மணிகண்டன், விஜயகுமார் மற்றும் இந்த வாய்ப்பளித்த பொள்ளாச்சி மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.



