சுசீந்திரம், ஜூலை 27 –
நாகர்கோவில் ராமவர்மபுரம் வடக்கு சற்குண வீதியை சேர்ந்தவர் மோசஸ் (53). இவர் அச்சன்குளத்தில் உள்ள மனோலயா மனநல காப்பகத்தில் நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
சுசீந்திரம் பைபாஸ் சாலையில் அவர் வந்த போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோசஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மோசஸ் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தாயார் வசந்தவதி (78) சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் ஆகியோர் வழக்கு செய்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பாலப்பள்ளம் படுவூர் பகுதியை சேர்ந்த அருள் ஸ்டேன்லி ஜோஸ் (54) மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


