சிவகங்கை, செப். 25 –
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 2025-ஐ முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.
பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தலைமையில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் வழங்கினார்.
உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (காரைக்குடி) ஆசிஸ் புனியா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ் கண்ணன், காரைக்குடி மாநகராட்சி ஆணையர் சங்கரன், காரைக்குடி, செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியின் நிறுவனர் சுப. செல்லப்பன், தாளாளர் சே. சத்தியன், கல்வி இயக்குநர் மா. ராஜேஸ்வரி, காரைக்குடி வட்டாட்சியர் ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



