சிவகங்கை , மே -10
சிவகங்கை மாவட்டம் ஆண்டு தோறும் வறட்சிக்கு இலக்காகும் மாவட்டமாகும் இந்த மாவட்டத்தில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்த பனை மரங்கள் மூலம் இந்த மாவட்டத்தில் அதிக அளவில் குடிசைத் தொழில்கள் நடைபெற்று வருகிறது.
இந்தக் குடிசைத் தொழில் மூலம் பெரிய ஓலைப் பெட்டிகள் ஓலைக் கொட்டான்கள் சுலகுகள் மற்றும் விசிறிகள் குழந்தைகளுக்கான கிளுகிளுப்பை கோடை வெயிலுக்கான வண்ண வண்ண தொப்பிகள் பூஜைப் பொருட்களை கொண்டு செல்லும் தூக்குகள் திறந்து மூடும் வகையிலான கொட்டான்கள் போன்ற பல்வேறு வகையான ஓலைகளால் ஆன பொருட்களை விவசாய தொழிலாளர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தயாரித்து வருகிறார்கள் அவற்றை இன்றுள்ள வியாபாரப் போட்டியில் விற்க முடியாமல் திணறி வருகிறார்கள்
இதே போல் இந்த மாவட்டத்தில் தின்பண்ட பொருட்கள் தயாரிக்கும் சிறுதொழில்கள் ஊறுகாய் தொழில்கள் மிளகாய்ப் பொடி தயாரித்து அவற்றை பேக்கிங் செய்து விற்பனை செய்தல் தேங்காய் கொப்பரைகள் மூலம் தேங்காய் எண்ணெய் தயாரித்து அவற்றை விற்பனை செய்தல் தேங்காய் நார் கழிவுகளில் இருந்து மெத்தைகள் தாவரங்களுக்கு நீரை சேமிக்கும் தொகுப்புகள் போன்ற பல்வேறு குடிசைத் தொழில்கள் இந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.
இது போன்ற தொழில்களுக்கு அரசு முழு வீச்சில் வழிகாட்டுதல் செய்யாததால் அவர்கள் வருமானம் இன்றி இந்த தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறார்கள் சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் இது போன்ற குடிசை தொழில்களுக்கு அரசு அதிக அளவில் மானியம் வழங்கி விவசாயத் தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும் என்ற எதிர்பார்புடன் உள்ளனர்.