நாகர்கோவில், அக்டோபர் 21 –
நாகர்கோவிலில் இருந்து உரிய நாட்களில் தீபாவளி சிறப்பு இயக்கப்படாமல் தென் மாவட்ட மக்களை புறந்தள்ளியது வருத்தமளிக்கிறது என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துக்குமார் தெரிவித்துள்ளதாவது: தீபாவளி பண்டிகை காலத்தை முடித்து விட்டு நாகர்கோவிலில் இருந்து மக்கள் சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்ல அவதி பட்டு கொண்டிருக்கையில், பயணிகளின் முன்பதிவு அதிகரிக்க வில்லை என்று காரணத்தைக் காட்டி தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளது தென்னக இரயில்வே நிர்வாகம். இது வேதனை அளிக்கிற செயலாகும். தீபாவளிக்கு முன்பும், பின்பும் உரிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படாதது கண்டிக்கதக்க ஒன்றாகும்.
பொதுவாகவே பயணிகள் உரிய நேரத்தில் ரயிலில் பயண சீட்டு கிடைக்காத நிலையில் தான் பேரூந்துகளையே நாடுவார்கள். இது தான் இயல்பு. அதிலும் இந்த முறை தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த காலங்களை விட இந்த ஆண்டு பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் இரயில்வே நிர்வாகம் பயணிகளின் முன்பதிவு அதிகம் இல்லை என்று நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்ல இருந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது.
தீபாவளிக்கு முன்பும், பின்பும் உரிய நேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருக்க வேண்டும். தீபாவளி அன்று சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப் பட்டது. இந்த சிறப்பு ரயிலால் பயணிகள் பலரும் பலனடைந்து உள்ளனர். அதே சிறப்பு ரயில் அடுத்த நாள் (செவ்வாய் கிழமை) நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும் என்று பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அன்று சிறப்பு ரயில் இயக்கப்பட வில்லை என்றால் வில்லை. நாகர்கோவிலில் இருந்து வருகிற 28- ந்தேதி இயக்கப்படுவதாக இருந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போன்று நாள் கடந்து சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படுவதாக இருந்த சிறப்பு ரயில் சேவையையும் ரத்து செய்துள்ளது.
அறிவிக்கப்பட்டிருந்த ஆறு சிறப்பு ரயில் ரத்தால் தென் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தென் மாவட்ட எம்.பி க்களும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். சிறப்பு ரயிலில் மக்கள் பாதுகாப்பதுடன் பயணிக்கும் வகையில் எம்.பிக்கள் யாரும் முயற்சியை மேற்க்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.



