By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமிதோப்பில் அடையாளம் தெரியாத நபரை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாமிதோப்பில் அடையாளம் தெரியாத நபரை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது
கனஂனியாகுமரி

சாமிதோப்பில் அடையாளம் தெரியாத நபரை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

Last updated: July 8, 2025 5:11 pm
July 8, 2025
56 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூலை 8 –

சாமிதோப்பு கோவிலில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தர்மம் எடுத்து சாமிதோப்பு பஸ் பஸ்டாப்பில் தங்குவது வழக்கம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அங்கு தங்கியிருந்த நபரிடம் சாமிதோப்பு செட்டிவிளையை சேர்ந்த நாராயணவடிவு என்பவரது மகன் குருசாமி என்ற ராஜா என்பவர் இங்கு தங்க கூடாது கோவிலில் போய் தங்கு என சத்தம் போட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல் சனிக்கிழமை இரவு பஸ் ஸ்டாப்பில் வைத்து மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் குருசாமி என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அடையாளம் தெரியாத நபரின் நெஞ்சு பகுதியில் குத்தி கொலை செய்தார்.

இது குறித்து அருகில் உள்ளவர்கள் தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளியை கண்டுபிடிக்க தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

பின்னர் கொலை செய்தது செட்டிவிளை பகுதியை சேர்ந்த குருசாமி என்ற ராஜா என்பவர் என்பதை அறிந்த போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து குருசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவருக்கும் எனக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. சனிக்கிழமை இரவு சாமிதோப்பு பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடைக்கு அருகே இருந்த நபரிடம் ஏற்கனவே உள்ள விரோதத்தில் இங்கு படுக்கக் கூடாது ஒழுங்கா கோவிலில் போய் படு இங்கிருந்தா நடப்பது வேறு என அவதூறு வார்த்தை பேசி சத்தம் போட்டேன்.

ஆனால் அந்த நபர் நான் போகமுடியாது உன்னால் என்ன செய்யமுடியுமோ செய் என சத்தம் போட உடனே நான் இந்த ஏரியாவில் பெரிய ரவுடி என்னையே எதுத்து பேசுவியா என சத்தம் போட்டு இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து நீ உயிரோடு இருந்தா தானே இங்கு வந்து இருப்பாய் என ஆவேசமாக பேசி இத்தோடு செத்து தொலைந்து போ என சொல்லி கத்தியால் அவனது இடது பக்க மார்பில் குத்தி கொலை செய்தேன் என கொலையாளி குருசாமி வாக்குமூலமாக போலீசாரிடம் தெரிவித்தார்.

கொலை குற்றவாளி குருசாமி மீது கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சரவணன் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். மேலும், கொலை செய்யப்பட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மது பாட்டிலுக்கு ரசீது கேட்டதால் வடசேரி டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் 363.28 கோடி ரூபாய்
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் முறைகேடு
உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கை
நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி

December 20, 2025
59 Views
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அனைத்து பணியாளர்களையும் பாராட்டியமேலாண் இயக்குநர்
கறுப்பு துணி கட்டியபடி தெருக்களில் போராட்டம்
குமரி காதலன் கொலை ; காதலிக்கு தூக்கு தண்டனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account