வாணியம்பாடி, ஜூலை 30 –
வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் மற்றும் லாலா ஏரி பகுதிகளில் அளவுக்கு அதிகமான ஆழம் போட்டு சட்டவிரோதமாக டிப்பர் லாரிகள் மூலம் 500க்கும் மேற்பட்ட லோடுகள் மண் மற்றும் மணல் கடத்தல். வானிடெக் நிறுவனத்திற்கு பின்புறமாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டு சமன் செய்வதற்காக கடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சட்ட விரோத மண் மற்றும் மணல் கடத்தலை தடுத்து கனிம வள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை.



