சங்கரன்கோயில், செப். 25 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆகியோர் ஆலோசனையின் படி சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்ட இயக்கம் 2.0 கீழ் தூய்மையே சேவை 2025 என்ற தலைப்பின் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் சாம்கிங்ஸ்டன் , பொறியாளர் இர்வின் ஜெயராஜ், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்பி டாக்டர் ராணிஸ்ரீ குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் . தொடர்ந்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து திருவள்ளுவர் சாலை வார்டு 6 கீதாலயா தியேட்டர் ரோடு முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பின்பு திருவள்ளுவர் சாலை முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு எம்எல்ஏ மற்றும் எம்பி ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, அவைத்தலைவர் முப்பிடாதி, முன்னாள் வர்த்தக அணி பத்மநாபன், மாணவரணி வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப அணி சிவசங்கரநாராயணன், இளைஞரணி ஜான்சன், வக்கீல் சதீஷ், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி, கைலாசம், கவுன்சிலர்கள் புஷ்பம், செல்வராஜ், ராஜாஆறுமுகம், வார்டு செயலாளர்கள் மகா மாரியப்பன், நடராஜன் மற்றும் தூய்மை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள், டெங்கு விழிப்புணர்வு பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



