சங்கரன் கோவில், ஜூலை 1 –
சங்கரன் கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு 208 மாணவ மாணவியர்களுக்கான ஆறு நாள் பயிற்சி திட்டம் துவக்க விழா நடைபெற்றது. விழாவில் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் கல்வித்துறையில் புரட்சிகரமான பல திட்டங்களை செயல்படுத்தியவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவ மாணவியர்களுக்கான தவப்புதல்வன் திட்டம், தவப்புதல்வி திட்டம் மூலமாக ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறார். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 பேர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் கற்றவர்கள்.
நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத செல்வம் கல்விதான். எனவே, மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என பல்வேறு திட்டங்கள் பற்றி மாணவ மாணவியர்களுக்கு எடுத்துக்கூறி கலந்துரையாடினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் இணை பேராசிரியர் முனைவர் செண்பகவல்லி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி பாலாஜி, கல்லூரி பணியாளர்கள், அரசு விடுதிக்காப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் தமிழ் துறை தலைவர் இணை பேராசிரியர் கலா கோபி நன்றி கூறினார்.