கோவை, அக். 02 –
கோவையில் பிரசித்தி பெற்ற ராஜவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் நவராத்திரி விஜயதசமி உற்சவ விழா தொடர்ந்து ஆர் எஸ் புரம் ராமச்சந்திரா சாலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ லட்சுமி கணபதி கோவிலில் இருந்து சமுதாய சான்றோர் முன்னிலையில் திருமஞ்சன தீர்த்த பாகு கலச கும்பம் பராக்கத்தி போட்டுக் கொண்டு ராஜவீதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவிலுக்கு அழைத்து வந்து மகா அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்த கோடிகள் திஸ்கோ பெற்றுக்கோ என்ற கோஷத்துடன் கோவிலுக்கு வந்தடைந்தனர். கோயிலுக்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் திருக்கோவில் சார்பாக வழங்கப்பட்டன மேலும் நிகழ்ச்சியில் அறங்காவலர் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், உப தலைவர் வினோத் குமார், தர்ம கர்த்தாக்கள் பொன் பால்ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர். ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் அலங்கார குழுவும் மேற்படி நாட்களில் குல தேவாங்க ஆறு வீதி 18 செட்டிமைக்கரர்களின் குலக்கட்டளை உறசவ நவராத்திரி பூஜை நடைபெற்றது.



