By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்–2012 சார்பில் செய்தியாளர் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்–2012 சார்பில் செய்தியாளர் சந்திப்பு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்–2012 சார்பில் செய்தியாளர் சந்திப்பு

Last updated: July 9, 2026 8:29 pm
July 9, 2026
9 Views
Share
SHARE

கோவை, ஜூலை 9 –

கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்–2012 சார்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், புகைப்படத் தொழில் எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சேவைக் கட்டணங்கள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் கேமரா, லென்ஸ், கணினி, ஹார்ட்டிஸ்க், SSD, மெமரி கார்டு,ஆல்பம், பிரிண்டிங் பொருட்கள், பிரேம்கள், மின்சாரம், இணைய வசதி, வாடகை, ஊழியர் ஊதியம் உள்ளிட்ட தொழில்சார் செலவுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.

மேலும் Adobe Creative Cloud, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மென்பொருட்கள், Cloud Storage உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளுக்கான சந்தா கட்டணங்களும் செயல்பாட்டு செலவுகளை கணிசமாக உயர்த்தியுள்ளதாக தெரிவித்தனர்.இந்தச் செலவின உயர்வால் பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஸ்டுடியோக்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கடைகளை மூடி, மாற்றுத் தொழில்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அண்டை மாநிலமான கேரளாவில் எட்டு பிரதிகள் கொண்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்திற்கான கட்டணம் ₹350 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் நீண்ட காலமாக சுமார் ₹180-க்கு வழங்கப்பட்டு வந்த சேவையை தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ₹200 ஆக மட்டுமே உயர்த்தியுள்ளதாக சங்கம் தெரிவித்தது. இந்தக் கட்டண உயர்வு அதிக லாபம் நோக்கியதல்ல; தரமான சேவையை தொடர்ந்து வழங்குவதற்கான குறைந்தபட்ச அவசியம் எனவும் விளக்கமளித்தனர்.

புகைப்பட ஸ்டுடியோக்கள் குடும்ப நினைவுகள், திருமணங்கள், கல்வி, வேலைவாய்ப்பு, அரசு ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய தருணங்களை பதிவு செய்து பாதுகாக்கும் நம்பகமான சேவை மையங்களாக இருப்பதால், பொதுமக்கள் தங்களது பகுதியிலுள்ள பதிவு செய்யப்பட்ட உள்ளூர் ஸ்டுடியோக்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் சங்கம் வேண்டுகோள் விடுத்தது.மேலும், சேவைக் கட்டண மறுஆய்வு அட்டவணை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும், அதை ஒருமித்த முறையில் நடைமுறைப்படுத்துமாறும் சங்கம் கேட்டுக் கொண்டது. புகைப்படத் தொழிலின் தரம், நம்பகத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக தொடர்ந்து செயல்படுவோம் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய வில்வித்தைப் போட்டி: பிலாங்காலை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
தக்கலை அருகே பெண்ணிடம் பல லட்சம் மோசடி: பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு
பிரதமர் மோடியை அவமதித்த விவகாரம்: நாகர்கோவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நள்ளிரவில் கைது: 30 பேர் மீது வழக்கு
தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 26ம் தேதி நடக்கிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்

June 21, 2025
39 Views
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் இப்தார் விருந்து: ஏராளமானோர் பங்கேற்பு
“வள்ளுவனும் அதிமுகவும் ” திருவள்ளுவர் சிலை மூடி
அரசு மருத்துவக் கல்லூரி பணியாளர் தற்கொலை
கடுமையான வெப்பத்தை சமாளிக்க நீர்மோர் பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account