கோவை, ஜூன் 23 –
கோவை மாநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அறிவுறுத்தலின்படி தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை தெற்கு 48 வது வார்டு புலியகுளம் பகுதி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் இணைச் செயலாளர் மைக்கேல், துணைச் செயலாளர் உன்னிகிருஷ்ணன், தெற்கு தொகுதி பொறுப்பாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ராம்குமார், பகுதி ஜான் மற்றும் 48வது வார்டு செயலாளர் பிரேம்குமார் மற்றும் 48வது வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு முதலமைச்சர்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.



