கோவை, ஜூன் 30 –
கௌமார மடாலயம் தவத்திரு ராமானந்தா அடிகளார் கல்வி நிறுவனங்கள் மற்றும் துடியலூர் மணியன் குலம் காளியம்மன் அறக்கட்டளை சார்பில் 2024 – 2025-ல் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வின்னர்ஸ் இந்தியா குழும தலைவர் சி.கே. கண்ணன் கலந்து கொண்டு பத்தாம் வகுப்பில் மாநில அளவில் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்ற கமலி ஸ்ரீ என்ற மாணவிக்கு ஒரு வீட்டுமனை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்தார்.