By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் ‘நான் உயிர் காவலன்’ சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் ‘நான் உயிர் காவலன்’ சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
கோயம்புத்தூர்

கோவையில் ‘நான் உயிர் காவலன்’ சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

Last updated: September 15, 2025 1:00 pm
September 15, 2025
26 Views
Share
SHARE

கோவை, செப். 15 –

கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் (UYIR) ஆகியவை இணைந்து கோயம்புத்தூரின் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன்’-ஐ துவக்கினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் அறிமுகம் செய்தார். அவருடன் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், உயிர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ். ராஜசேகரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் உயிர் அறக்கட்டளையின் அறங்காவலர் எஸ். மலர்விழி மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக கோயம்புத்தூரில் சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில் உயிர் அறக்கட்டளை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் பேரணிகள், போட்டிகள், கருத்தரங்குகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ‘உயிர் குட்டி காவலர்’ போன்ற பல முயற்சிகள் அடங்கும். உயிர் மன்றங்கள் (Uyir Clubs) மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சமூகத்தில் சாலைப் பாதுகாப்பு தூதுவர்களாக செயல்பட ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அறிமுகம் செய்யப்பட்ட ‘நான் உயிர் காவலன்’ என்ற பிரச்சாரம் கோயம்புத்தூர் முழுவதும் மிக அதிக அளவிலான மக்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை எடுத்துச்செல்ல வேண்டும் என்ற இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் 10 லட்சம் பேர் பங்கேற்று சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்று போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி உயிர்களைக் காப்போம் என உறுதியளிக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போல அக்டோபர் முதல் வாரத்தில் கோயம்புத்தூரில் விபத்தில்லா வாரம் ஒன்றை உருவாக்கும் லட்சியத்துடன் அனைத்து வயதினரிடமும் இதை கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த உன்னத நோக்கில் அரசு அதிகாரிகள், காவல்துறை, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை சங்கங்கள், சமூக நல அமைப்புகள் என அனைவரும் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்ப பண்ணை
முப்பெரும் விழா நடைபெற்றது
கோவையில் 170- வது குரு ஜெயந்தி விழா
உல்லாசத்திற்கு அழைத்த இரண்டு புரோக்கர்கள்
கோவை கோட்டைமேடு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது

January 21, 2026
16 Views
அதியமான் பப்ளிக் பள்ளிக்கு ஆசிய அளவில் விருது
பொது அறிவிப்பு
சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
அரசு ஆண்கள் பள்ளிநூற்றாண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account