கோவை, ஆகஸ்ட் 03 –
கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல் நிலையம்,பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆலாந்துறை பேரூராட்சி அலுவலகத்தில் கோவை மண்டல தலைவர் ப. சுதர்சன் தலைமையில் கிளைத் தலைவர் கருணாகரன் முன்னிலையில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் சாலையோர கடைகள் நடமாடும் காய்கனி கடைகள் மற்றும் வாகனத்தில் ஒலிபெருக்கி வைத்து வியாபாரம் செய்யும் கலாச்சாரம் அதிகமாகி
உள்ளது.
விரைவில் இந்த பிரச்சனைக்கு கோவை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் நமது தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மூலமாக தீர்வு காணப்படும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கூறினர்.
உடன் மாநில செயலாளர் வேதநாயகம், மண்டல செயலாளர் பாலகிருஷ்ணன்,
மண்டல பொருளாளர் பெரியசாமி, மண்டல ஒருங்கிணைப்பாளர், இடையற்காடு சி. பாஸ்கர், மண்டல துணைத்தலைவர் வி.ஜி. மணி, மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்னண், கிழக்கு மாவட்டம் சூலூர் ஒன்றிய தலைவர் ஜெபத்துரை
மற்றும் ஆலாந்துறை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.