நாகர்கோவில், அக்டோபர் 23 –
நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் முன்புள்ள சாலையோரம் இரண்டு பேர் குடிபோதையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் நடந்து சென்றவர்களின் ஒருவர் மீது மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொருவர் போதையில் இருந்ததால் இறந்தவர் யார் என்று தெரியவில்லை.
இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பஸ் மோதி இறந்தவர் மருங்கூர் அமராவதிவிளை புனித அந்தோணியார் தெற்கு தெருவை சேர்ந்த மரிய சேவியர் (35) என்பது தெரியவந்தது. இது குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


