ஈரோடு, செப். 4 –
ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துணை தலைவர் பாட்சா மத்திய ரயில்வே மந்திரிக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோயமுத்தூர் – நாகர்கோயில் மற்றும் கோயமுத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு லிங் எக்ஸ்பிரஸ் ரெயில் கொரோனா காலத்தில் 2021ல் நிறுத்தப்பட்டது. பின் நான்காண்டு காலமாக இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை. தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் தூத்துக்குடி செல்ல ரயில் வசதி இல்லாமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள். ஆகவே கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு இந்த ரெயிலை இயக்க வேண்டும்.
கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர், ஈரோடு,சேலம் வரை பேசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது இந்த ரெயிலும் கடந்த 4 ஆண்டுளாக இயக்கப்படாமல் உள்ளது. எனவே கோவையில் இருந்து சேலம் செல்ல ரூபாய் 35 மட்டுமே ரயில் கட்டணம். அதே நேரத்தில் பேருந்தில் சென்றால் ரூபாய் 150 கட்டணம். ஆகவே இந்த பயணிகள் ரயிலை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் 1973-ல் இருந்து இயக்கப்பட்டு வந்தது கன்னியாகுமரியில் இருந்து மும்பை ஜிஎஸ்டி வரை இயக்கப்பட்டது. கொரோனா பெருந் தொற்று காரணமாக இந்த ரயில் பூனா வரை இயக்கப்பட்டது. கடந்த நான்காண்டு காலமாக இந்த ரயில் பூனா வரை தான் செல்கிறது. மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த இந்த பழம்பெறும் ரயிலை மும்பை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் .
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வர இருப்பதால் பொது மக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


