சென்னை, ஆகஸ்ட் 05 –
கேவின்ஸ் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக்’ (TNPPL) – சீசன் 2 சென்னையில் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் அணிகளுடன் மேடையில் தோன்றினர். லீக் இயக்குனர் யோகேஷ், தமிழ்நாடு பிக்கிள்பால் சங்கத்தின் தலைவர் மோஹித் குமார் மற்றும் செயலாளர் டாக்டர் காவ்யா சோமேஷ் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் 12 அணிகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடக்க விழாவில் பேசிய லீக் இயக்குனர் யோகேஷ் கூறியதாவது: “டி.என். பி.பி.எல் – இன் சீசன் 2, தமிழ்நாட்டில் பிக்கிள்பால் விளையாட்டுக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைகிறது. அதிகரித்த பங்கேற்பு மற்றும் ரசிகர்களின் வளர்ந்து வரும் ஆர்வம் ஆகியவற்றை கொண்டு பார்க்கும் போது, இந்தியாவிலேயே பிக்கிள்பால் விளையாட்டின் முக்கிய மையமாக தமிழ்நாடு விளங்கும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பிக்கிள் பால் தலைவர் மோஹித் குமார் கூறியதாவது: “இந்த லீக் போட்டியானது வீரர்களுக்கு ஒரு தொழில்முறை தளத்தை வழங்குவதோடு, அடிமட்ட அளவில் இவ்விளையாட்டில் பங்கேற்பதையும் ஊக்குவிக்கிறது. தமிழ்நாடு பிக்கிள் பால் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) ஆகியவற்றின் கூட்டு அங்கீகாரத்துடன்
2வது சீசனுக்கான லீக் போட்டிகள் 2026ம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 20 வரை சென்னையில் உள்ள ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ ஏட்ரியம்’ பகுதியில் நடைபெறும் என்று தெரிவித்தார்.



