சுசீந்திரம், அக். 18 –
சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பகுதியைச் சார்ந்தவர் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட துணைத் தலைவரும் தேரூர் பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலருமான ராஜஸ்ரீ. இவர் தீபாவளியை முன்னிட்டு தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு மேலாக தேரூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு புது துணி இனிப்பு வகைகளை அவர்கள் இல்லத்திற்கே சென்று வழங்கி வருகிறார்.
இதுகுறித்து அவரிடம் கேட்கும் போது ஏழை கூலி தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக என்னால் இயன்ற சிறு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் குடும்பத்தாருக்கு இல்லத்தில் சென்று புது துணி இனிப்பு தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வருகின்றேன்.
அது போல எனது 13-வது வார்டு பொதுமக்களுக்கும் அவர்கள் கோரிக்கையை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களையும் தேரூர் பேரூராட்சி அலுவலக உதவியுடன் செய்து வருகிறேன் என்றார். அதுபோல அவரது சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



