மார்த்தாண்டம், நவ. 25 –
உண்ணாமலைகடையில் குளத்தில் மூழ்கி முதியவர் பலியானார். உண்ணாமலைகடையை சேர்ந்த தங்கையா. வீட்டின் அருகில் உள்ள ஆலுமூட்டு குளத்தில் குளிக்க சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் உறவினர்கள் தேடி சென்ற போது நீரில் மூழ்கி இறந்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து தங்கையா மகன் மதன் மார்த்தாண்டம் போலீசில் புகார் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


