குளச்சல், நவ. 6 –
குளச்சல் அருகே கொட்டில் பாடு பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி (42). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி மினி சிடா (36). இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கு இடையே கடந்த 1ம் தேதி வழக்கம் போல் ஆண்டனி மீன்பிடிக்க சென்று விட்டார்.
அப்போது வீட்டில் இருந்த ரூ. 2 லட்சத்தை மினி சிடா எடுத்து வீட்டிலிருந்த மாமியாரிடம் குளச்சலில் உள்ள வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் மாலை வெகு நேரமாகியும் மினி சிடா வீட்டிற்கு வரவில்லை. இதனால் மாமியார் பதட்டம் அடைந்தார். உடனே மருமகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில் வேலைக்கு சென்ற ஆன்டனி வீடு திரும்பினார். அப்போது மனைவி வீடு திரும்பவில்லை என்ற தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தார். எந்த தகவலும் கிடைக்காத நிலையில் மினி சிடா எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்ற தகவல் உடனடியாக கிடைக்கவில்லை. இதை அடுத்து குளச்சல் காவல் நிலையத்தில் ஆண்டனி புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்துடன் மாயமான மினி சிடாவை தேடி வருகின்றனர்.


