கன்னியாகுமரி மே 8
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முஸ்லிம் முஹல்லத்தின் சட்டதிட்டத்தின் படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 6 வார்டுகள் கொண்டது ஒவ்வொரு வார்டுகளிலும் இருந்து 15 நபர் கள் வீதம் வைத்து 90 நபர்களை பொதுக்குழு உறுப்பினர்களை பொதுமக்கள் வாக்காளித்து தேர்வு செய்வார்கள் 1 வது வார்டு மற்றும் 4வது வார்டுகளுக்கு மட்டுமே வாக்குபதிவு நடைபெற்றது. 2, 3, 5,6 ஆகிய வார்டுகளில் பொதுக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த 90 பொதுக்குழு உறுபினர்களில் 18. செயற்க்குழு உறுபினருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 27 நபர்கள் செயற்க்குழு உறுப்பினருக்கு போட்டியிட்டு 18 நபர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். இந்த 18 செயற்க்குழு உறுப்பினர்களில் 5 நபர்கள் நிர்வாக தேர்தலில் போட்டியிட்டனர் அதில் 5 நபர்களும் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் குளச்சல் முஸ்லிம் முஹல்ல தலைவராக சேர்மன் அ.நசீர், துணைத் தலைவராக சாதிக்,செயலாளராக சுபுஹானி, துணைச் செயலாளராக அன்வர் சதாத், பொருளாளராக நாகூர் கான் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
குளச்சல் முஸ்லிம் முஹல்ல தேர்தலில் நசீர் அணியினர் வெற்றி.

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics