குளச்சல், செப். 02 –
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் பல்நோக்கு பாதுகாப்பு மைய தன்னர்வலர்களுக்கு 3 நாள் பயிற்சி 01.09.2025 முதல் 03.05.2025 என 3 நாள்களாக குளச்சல் அரசு நடுநிலை பள்ளி அருகே உள்ள பேரிடம் பாதுகாப்பு மைய கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது. இந்த பயிற்சியில் சைமன் காலனி, ரீத்தாபுரம், குளச்சல் பகுதியை சார்ந்த தன்னர்வலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியை தேசிய அளவியா பயிற்று பின் டைன் அருள், மாநில பயிற்றுகள் ஜாண் ராணி, அகிலா, ஆகியோர் வழங்கினார்கள். 2-ம் நாள் பயிற்சியை மாவட்ட துணை ஆட்சியர், பத்மனபபுரம் கோட்டாச்சியர், கங்குளம் தாசில்தார், ஆகியோர் பார்வையிட்டனர்.
பயிற்சி ஏற்பாடுகளை வருவாய் கிராம நிர்வாக அலுவலர்கள் வழி சிறப்பாக செய்திருந்தனர். பயிற்சியில் தங்குமிட மேலாண்மை பயிற்சி மேலாண்மை வீட்டு அளவிலான தயாரிப்புக்கான அடிப்படை பயிற்சி, மீட்பு பயிற்சி, முதலுதவி பயிற்சி கிராம பேரிடர் மேலாண்மை திட்டம் பற்றி சிறப்பான முறையில் பயிற்சி வழங்கப்பட்டது. அனைத்து பங்கேற்பாளரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகத்துக்கும் குறிப்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்ததோடு தொடர்ந்து இது போன்ற பயிர்ச்சி அனைவரும் வழங்குவதன் மூலம் பேரிடர் பாதிப்புகளை என்றும் காலத்தில் குறைக்க முடியும் என நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.



