நாகர்கோவில், ஜூலை 22 –
கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளையார்புரத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்து நாடார் சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்து நாடார் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் 10ம் வகுப்பில் 450 மதிப்பெண் 12ம் வகுப்பில் 500 மதிப்பெண்கள் அதற்கும் மேல் பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பரிசு தொகை, சாதனைகள் படைத்த மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.
இதில் குமரி மாவட்ட இந்து நாடார் சங்க காமராஜ் தலைமை வகித்து உரையாற்றினார். பொது செயலாளர் சுபாஷ் வரவேற்புரையாற்றினார். குமரி மாவட்ட சங்க செய்து வரும் வரலாறு குறித்து துணைத் தலைவர் சுப்பிரமணி உரையாற்றினர். ஸ்ரீஜயப்பா கல்லூரி பேராசிரியர் டாக்டர் சவிதா, சிறப்புரையாற்றினார். பொருளாளர் ராஜதுரை நன்றி கூறினார். இந்த விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி. பாலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், சட்டமன்ற உறுப்பினர் காந்தி, நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அரோக்கியராஜன், காலபெருமாள், டாக்டர் சிவக்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில செயல் தலைவர் டேவிட்சன் உட்பட சமுதாய முக்கிய பிரமுகர்கள், குமரிமாவட்ட இந்து நாடார் சங்க செயற்குழு உறுப்பினர்கள் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை
பாலகிருஷ்ணவேலையா தொகுத்து வழங்கினார்.