தக்கலை, ஆக. 23 –
குமரி மேற்கு மாவட்ட ஐஎன்டியுசி சார்பில் தக்கலை தாலுகா அலுவலகம் அருகே இருந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வரை வாகன பிரச்சார பயணம் நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்: மத்தியில் ஆளும் அரசு தொடர்ந்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் திட்டங்களை கொண்டு வருகிறார்கள். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது அவர்களின் கடமை ஆகும். உங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உங்களுக்கு துணையாக இருப்பேன். பாராளுமன்றத்தில் பேசியும் நிறைவேற்றி தர முயற்சி எடுக்கப்படும் என பேசினார்.
நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் தொகுதி ஐஎன்டியூசி துணைத்தலைவர் சி.எல். ராபர்ட் தலைமையில் நடைபெற்ற வாகன பிரச்சார பயணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், ஆரோக்கிய ராஜன், பத்மநாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார், வட்டார தலைவர் பிரேம் குமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், தக்கலை ஐஎன்டியூசி நகர தலைவர் செய்யது அலி, வட்டார தலைவர் ஜெகன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் லைலா, மூத்த காங்கிரஸ் தலைவர் பி.டி.எஸ். மணி, தங்கநாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



