மடத்துக்குளம், ஜூலை 28 –
திருப்பூர் மாவட்டம் குப்பம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்ணீஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கராம நல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்புசாமி, துணைத்தலைவர் பிரேமலதா உத்தம ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி. தாமோதரன் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வி தரம், பெற்றோர்களின் ஒத்துழைப்பு, மாணவிகளின் பாதுகாப்பு, பள்ளிக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.