கருங்கல், ஜுலை 5 –
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் பி. கோபால் தலைமையில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற கோஷத்தோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. பாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், இந்திரா நகர், பூட்டேற்றி காலனி பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மரிய சிசுக்குமார், கிள்ளியூர் தொகுதி பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம், முஞ்சிறை ஒன்றிய செயலாளர் மாஸ்டர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.