கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 22 –
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி சேராத மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான “உயர்வுக்கு படி” வழிகாட்டி நிகழ்ச்சியில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த 8 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயிலுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் வழங்கினர். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம. கௌரிசங்கர், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



