கிருஷ்ணகிரியில் 31வது அரசு மாங்கனி கண்காட்சியை தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடத்த தேமுதிகவினர் கடும் கண்டனம்!
கிருஷ்ணகிரி மே 29:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் மாங்கனி விளைகிறது. மா விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் ஆண்டுதோறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரியில் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 31-வது மாங்கனி கண்காட்சியை நடத்தி முடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து தேமுதிக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட SP, ஆகியோரை சந்தித்துவிட்டு, செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் அவசரகதியில் திமுக மாவட்ட செயலாளருக்கு சொந்தமான தேவராஜ் திடலில், மாவட்ட நிர்வாகம் மாங்கனி கண்காட்சியை நடத்த அடிக்கல் நாட்டியுள்ளனர். கடந்த வருடம் இதே போல் பிரச்னை ஏற்பட்டு, அதை பாஜக மற்றும் பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த கால மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் கிருஷ்ணகிரி ஆடவர் கல்லூரியில் நன்றாக நடத்தினார்கள். ஆனால் இந்த வருடம் திடீரென சுங்கச்சாவடி அருகே நடத்த வேண்டிய அவசியம் ஏன் என்றும்?, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகே மட்டுமல்லாமல் சுங்கச்சாவடி அருகிலேயே இது போன்ற கண்காட்சியை அமைத்தால், பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ஏற்படும் வாகன நெரிசலால், போக்குவரத்திற்கு இடையூறு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, விபத்து, உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே அரசு கண்காட்சி நடத்த பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு திமுக MLAவின் இடத்தில் அரசு நடத்தும் 31ஆவது மாங்கனி கண்காட்சியை இடமாற்றம் செய்துரத்து செய்து மாங்கனி கண்காட்சியை அரசுக்கு சொந்தமான இடத்தில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், தவறினால் கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக சார்பில் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தும் என எச்சரித்தார். மாங்கனி விழா குழு லாப நோக்குடன் செயல்படுவதை தவிர்த்து, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் சிறப்பாக அகில இந்திய மாங்கனி கண்காட்சியை நடத்த தேமுதிக முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் கூறினார். இந்த நிகழ்வின்போது தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.சின்னராஜ், மாவட்ட அவைத்தலைவர் எல்.முருகன், மாவட்ட கழக பொருளாளர் வி.லட்சுமணன், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.முருகன், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சி.வஜ்ரவேல், காவேரிப்பட்டணம் ஒன்றிய கழக செயலாளர் விஜய்வல்லரசு, பொதுக்குழு உறுப்பினர்கள் AKவேலு, H.காதர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.சி.கனக்கன், காவேரிப்பட்டினம் ஒன்றிய துணை செயலாளர்கள் பி.சி.குமார், ராஜா, ஜெகதீஷ், பிரகாஷ், ராமசாமி, கிருஷ்ணகிரி ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தன், ஒன்றிய துணை செயலாளர் ஆர்.வேடியப்பன், மாவட்ட நிர்வாகி பார்க்சிவா, தாளபள்ளி பிரகாஷ், மாவட்ட தொழில் சங்க துணை செயலாளர் கேப்டன் வேலு, பெத்தனப்பள்ளி ஊராட்சி செயலாளர் எம்.முருகேசன், உள்ளிட்ட தேமுதிகவினர் உடன் இருந்தனர்.


