By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் அண்ணா தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் அண்ணா தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் அண்ணா தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்

Last updated: July 6, 2026 7:00 pm
July 6, 2026
28 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 6 –

அண்ணா தொழிற்சங்கத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநிலச் செயலாளர் தமிழரசன் தமிழக முழுவதும் அண்ணா தொழிற்சங்க கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன்படி நேற்று தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய அண்ணா தொழிற்சங்க கூட்டத்தை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். தர்மபுரி மண்டல போக்குவரத்து பிரிவை சேர்ந்த முருகன் வரவேற்பு உரை ஆற்றினார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார், அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத், மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ராமு, தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன், தர்மபுரி அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர், அருள்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் தமிழரசன் துணைத் தலைவர் கோவிந்தராஜன் ஆகியோர் தொழிற்சங்கம் குறித்து ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி தாவிகாவில் இணைந்த சி விஜயபாஸ்கர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார் ஜாம்பவான்கள் எல்லாம் தாவைக்காவில் இருப்பதாகவும் தற்பொழுது அதிமுகவில் இருப்பவர்கள் லெட்டர் பேடுகள் என சி விஜயகுமார் விமர்சனம் செய்ததற்கு பதில் அளித்த கேபி முனுசாமி அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும் ஜாம்பவான்தான். தொண்டர்களால் உருவாக்கப்பட்டவர்கள்தான் இன்று கட்சியை விட்டுச் சென்ற ஓடுகாலிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள்” என்று சாடினார்.

அதிமுகவினர் 90% பேர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரப்போவதாக ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து குறித்துப் பேசுகையில், “அவருக்கு கொள்கை கிடையாது; திமுக, விசிக, அதிமுக எனப் பல இடங்களுக்கு ஓடியவர் அவர். 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட, 2 கோடி தொண்டர்களைக் கொண்ட பேரியக்கத்தை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவிற்கு தகுதியில்லை. இனி இதுபோன்று பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

கரூர் சம்பவம் குறித்து கணக்கு தீர்க்க வேண்டி உள்ள என பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு பதில் அளித்த கே.பி.முனுசாமி அமைச்சர் பொறுப்பில் இருந்துகொண்டு ஆதவ் அர்ஜுனா காவல்துறையை மிரட்டும் பாணியில் செயல்படுகிறார். உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில், சிபிஐ வசம் இருக்கும் ஒரு வழக்கை, அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இப்படி விமர்சிப்பது சாட்சிகளை அச்சுறுத்துவது போலாகும். இது வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியே தவிர வேறில்லை என தெரிவித்தார்.

பொதுமக்கள் நேரடியாக மனு அளிக்கலாம் என ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த அவர் தலைமை பொறுப்பில் இருக்கின்ற அரசு மனுக்களின் மீது சரியான முறையில் செயல்படவில்லை எனில் ஆளுநரிடம் மனு கொடுப்பது தவறில்லை அந்த அடிப்படையில் தான் தமிழக அரசு குதிரை பேரத்தில் இறங்கி உள்ளது தனக்கு முழு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் எல்லா கட்சிகளையும் உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. மதிமுக தலைவர் வைகோ வெளிப்படையாக பேசியுள்ளார், நீங்கள் வாருங்கள், சட்டமன்ற உறுப்பினர் பதிவை ராஜினாமா செய்யுங்கள் நானே வெற்றி பெற செய்கிறேன் என விஜய் தெரிவித்தாக கூறியுளார். அரசிடமே புகார் கூறினால் நியாயம் கிடைக்காது என்பதால் தான் ஆளுநரிடம் மனு அளிக்கிப்பட்டு உள்ளது.

அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.பி.முனுசாமி.54 ஆண்டுகால பாரம்பரியமிக்க அதிமுகவின் தொண்டன், தன் தலைவனைத் தவிர வேறு யாரையும் பார்க்க மாட்டான் நேற்று வந்த ஒரு நபருக்காக அதிமுகவில் தீர்மானம் போடுவதாகக் கூறி ஊடகங்கள் அண்ணாமலைக்கு மாயத் தோற்றத்தையும், விளம்பரத்தையும் தேடித்தருகின்றன” என்றார்.

இபிஎஸ் அவர்களின் தியாகம் மற்றும் உழைப்பைத் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். சுயநலத்திற்காகவும், அமைச்சர் பதவிக்காகவும் தவெகாவுக்கு ஓடியவர்கள் அங்கு ஏமாற்றத்தையே சந்திப்பார்கள். தவெக தலைவர் இன்னும் தன் முகத்தைக் கூடக் காட்டவில்லை. இங்கிருந்து சென்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள் அங்கு ‘புஸ்ஸி ஆனந்த்’ வாசலில் ஆட்டு மந்தையைப் போலக் காத்துக்கிடக்கிறார்கள் என்று கூறினார். நிகழ்ச்சியின் இறுதியாக டாஸ்மாக் பிரிவை சேர்ந்த சுப்ரமணி நன்றி உரையாற்றினார். இந்த கூட்டத்திற்கு அனைத்து போக்குவரத்து கழக பணிமனை நிர்வாகிகள் மின்சாரம் கூட்டுறவு சிவில் சப்ளை டாஸ்மாக் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு முதலமைச்சரின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
மண்டைக்காட்டில் ஏ.வி.எம். கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்
பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
கட்டிகானப்பள்ளி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
குளச்சலில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி; கணவன் மனைவி கைது

June 30, 2025
68 Views
காவல்துறை சார்பில் விளாத்திகுளம் மீனாட்சியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற 5ம் நாள் திருவிழா போலீசாருக்கு மரியாதை: ஜெகஜோதியாக காட்சியளித்த காவல் நிலையம்
ராமநாதபுரம் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டியில் 115 மாணவ மாணவிகள் பங்கேற்பு
ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்
தேனியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account