கணபதிபாளையம், ஆகஸ்ட் 14 –
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை கணபதி பாளையம் பகுதியில் இயங்கி வரக்கூடிய VAT டிரஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுமதி கலந்துகொண்டு போதை பொருட்களினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் குழந்தைகள் வன்கொடுமைகள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் துணை தாளாளர், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ மாணவியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.



