சிவகங்கை, அக் : 12
காரைக்குடியில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற Bhimfest’26 நிகழ்ச்சியில் கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், மாறுவேடம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 600 பேர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அம்பேத்கர் வேடமணிந்து ராம்வாக் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



