தோவாளை, ஜூலை 17 –
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் திட்டவினை காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழாவினை மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது. நடைபெற்ற விழாவில் கௌரவ தலைவர் ஆஸ்டின் பென்னெட், தலைவர் ஜெகன், செயலாளர் அனிஸ் குமார், துணை தலைவர் ஆனந்த் குமார், ஆசிரியர் இந்திரா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர். மாணவர்களின் தனித்திறமையை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கேடயம் வழங்கப்பட்டது. பல நலத்திட்ட உதவிகள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கும் வழங்கப்பட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.