மதுரை, ஜூலை 20 –
மதுரை மாவட்டம் கச்சியாரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மனுவில், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் கல் குவாரி செயல்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசுபாடு, தூசி மற்றும் வெடிவைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், பள்ளி, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே குவாரி அமைப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கல் குவாரிக்கு அனுமதி (Permit) வழங்கக்கூடாது என்றும், மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



