ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட் 29 –
கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலையில் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையம் சார்பில் பல்கலை போதை ஒழிப்பு குழுவுடன் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் துணைத் தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த், துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன்,
பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் முன்னிலையில் நடைபெற்றது. கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய பெண் தலைமை காவலர் பி. பிரேமலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
போதை பொருள், வாகனம் அதி வேகம், இரவு நேரங்களில் சுற்றுதல், வயது வரம்பு குறைந்த திருமணம் இவற்றால் தீமைகள், விபத்து, அதற்கான தண்டனைகள் பற்றி பேசினார். மேலும் தொலைபேசி எண்கள் 1930, 181 இவற்றின் பயன்பாடு, புதிய காவலர் உதவி கணினி பயன்பாட்டை கைபேசியில் ஏற்றி விவரித்தார். பேராசிரியர்கள் சி. பரணிதரன் வரவேற்று ருத்ரன் சுக்லா நன்றி கூறினார். கேக்சான் மற்றும் குழு மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



