நாகர்கோவில், 19.08.2026
கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் அ. அன்பு அவர்களின் உத்தரவின்படி, உதவி வனப் பாதுகாவலர்கள் நிதின் மற்றும் ஸ்ரீவல்சன் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி , பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ந. அன்பழகன் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற ரோந்து பணியின் போது, தெற்குமலை காப்புக்காடு அருகே கோட்டக்கரை காப்பு நிலத்தில் அட்டவணை I-ல் அறியப்படும் கடமான் எனும் மிளாவை , அவுட்டுக்காய் என்ற நாட்டு வெடிகுண்டு மூலம் வேட்டையாடப்பட்டு அதன் தலை, கால்கள், குடல் போன்ற உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலரின் உத்தரவுப்படி, குற்றம் செய்த நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து ஆதாரங்களின் அடிப்படையில் காட்டுப் புதூர் பகுதியை சேர்ந்த ஆல்வின் (30), ரமேஷ் (42) ஆகிய இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நகர் கோவில் வன வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
வனத்துறை அதிகாரிகள், காட்டு உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மற்றும் காட்டு தீயை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வனக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.



