சென்னை, செப். 16 –
ஓரியண்டல் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் 79-வது அமைப்பு தினத்தை சென்னை உள்ள பிராந்திய அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதன் முதல் நிகழ்வாக குத்து விளக்கேற்றியும் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் அதிகாரிகளும், ஊழியர்களும் மகிழ்ச்சியை பறிமாறி கொண்டனர்.
இதனையடுத்து சமூக நலன், சுகாதார நலனை பேணும் நோக்கில் ஓரியண்டல் இன்ஷுரன்ஸ் ஊழியர்கள் பொதுமக்கள் என பயன்பெறும் வகையில் இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்து பரிசோதனை முகாமை துணைப் பொதுமேலாளர் தலைமையேற்று பிரதீப்குமார் தொடக்கி வைத்தார். இதில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
பிராந்திய மேலாளர்களான சந்திரலேகா, சுஜாதா, ராஜ்யலட்சுமி, வனிதா வெங்கடேஷ் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் துணை தலைவர் ஜி. ஆனந்த்
ஆகியோரின் முன்னிலையில் முழு நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிர்வாக இயக்குநர் சுனிதா குப்தா, நியூ இந்தியா அஷூரன்ஸ் பொது மேலாளர் கே. ரமேஷ், ஜோஹோ கார்ப்பரேஷன் மனிதவளம் தலைமை அலுவலர் கே. குருமூர்த்தி, இந்தியா அஷூரண்ட் வாரண்டி சொல்யூஷன்ஸ் கண்ட்ரி ஹெட் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு ஆல் இந்தியா லாயர்ஸ் யூனியன் தலைமை செயலாளர் எஸ். ஸ்ரீவத்ஸன், பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஸ்மால் டிரேடர்ஸ் அசோசியேஷன் தலைமை செயலாளர் எம்.வி. கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



