நாகர்கோவில், அக். 2 –
குமரி மாவட்டத்தில் குற்றங்களும், குற்ற சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் விளைவாக மாவட்டத்தில் தற்போது குற்ற சம்பவங்கள் கணிசமாக குறைந்து உள்ளது. மேலும் பொதுமக்கள் தினந்தோறும் 12 மணி முதல் 2 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்கள் பிரச்சனைகளை குறித்து மனு அளிக்கும்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களை தொடர்பு கொண்டு முறையான விசாரணைக்கு உத்தரவிட்டும், சில சமயங்களில் உடனடி தீர்வும் காண்பதால் ஏராளமானோர் எஸ்பியை சந்தித்து மனு அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் குமரி மாவட்டம் புத்தேரி பாறையடியை சேர்ந்த சிவா என்பவர் தனது மனைவி குடும்பப் பெண்களை சீரழிக்கும் கும்பலிடம் சிக்கி கொண்டதாகவும் அவளை தான் மீட்க முயற்சிக்கும்போது அந்த கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாகவும் தன்னையும் தனது மனைவியையும் குழந்தைகளையும் இந்த கும்பலிடம் இருந்து பாதுகாக்கவும் தனது மனைவியை போல் இன்னும் ஏராளமான குடும்பப் பெண்களும், இளம் வயது பெண்களும் இந்த கும்பலிடம் சிக்கி உள்ளதால் அனைவரையும் மீட்டு பெண்களை தவறான பாதையில் வழிநடத்தும் இந்த கும்பல் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென செல்போன் ஆதாரம் மற்றும் மிரட்டல் ஆடியோ போன்றவற்றை ஒப்படைத்து புகார் மனு அளித்திருந்தார்.
அவரின் புகார் மனுவை பெற்றுக் கொண்ட எஸ்பி ஸ்டாலின் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரின் உத்தரவைத் தொடர்ந்து வடசேரி காவல் நிலைய போலீசார் இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் நடத்தி சம்பந்தப்பட்ட அழகு நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மூன்று பெண்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை காந்த ராஜா எனும் புரோக்கர் என நான்கு பேர் வெளிப்பகுதியில் பூட்டிவிட்டு உள்ளே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மசாஜ் சென்டர் உரிமையாளர் உடையார் மற்றும் பெண்ணின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் உரிமையாளர் உடையார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுத்த சில மணி நேரங்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு நகரின் மையப் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நடைபெற்று வந்த பாலியல் தொழில் கண்டுபிடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உடனடியாக குற்றவாளிகளையும் கைது செய்த எஸ் பி ஸ்டாலினை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.



