மார்த்தாண்டம், ஜூலை 1 –
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் மார்த்தாண்டம் கிளை சார்பாக போதை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியை தேசிய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் விஜயகுமார் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பின்னர் விழிப்புணர்வு ஜோதி ஏற்றப்பட்டு போதைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளோடு மார்த்தாண்டத்தில் துவங்கிய மாரத்தான் ஓட்டம் பயணம் சந்திப்பில் முடிவடைந்தது. இதில் ஏராளமான பெண் ஆண் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் விஜயகுமார், மருத்துவர்களின் மன அழுத்தம் போக்க மருத்துவ சங்கம் சார்பாக மாதம் ஒரு முறை யோகா, சிபிஆர் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மன அழுத்தத்தை போக்க மத்திய மாநில அரசுகள் யோகா, தியானம் உட்பட மன அழுத்தத்தை போக்கும் பயிற்சியாளர்கள் அழிக்க முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாரத்தான் ஓட்டத்தில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் செய்யப்பட்டது.