ஈரோடு, செப். 4 –
ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மல்லிகை அரங்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முகாமில் மனு அளித்த 4 பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், ஈரோடு மாநகராட்சி மண்டல தலைவர் காட்டு சுப்பிரமணியன், பகுதி செயலாளர் பொ. ராமச்சந்திரன், கவுன்சிலர் ஜெயந்தி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



