ஈரோடு: செப்.03.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக பாரம்பரிய கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. கலைஞர்கள் விழிப்புணர்வு கருத்துகளை கலை நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



