தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ கன்னிகா அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து மண்டல பூஜையின் 48-வது நாள் நிறைவை முன்னிட்டு இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ சாலை மாரியம்மன் கோவில் இருந்து ஊர் பொதுமக்கள் முக்கிய வீதி வழியாக ஸ்ரீ கன்னியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



