ஈரோடு, ஜூன் 26 –
தமிழகத்தில் உள்ள 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி இதுவரை ஈரோடு மாவட்ட கலெக்டராக இருந்த ராஜகோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி ஈரோடு மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அர்பித் ஜெயின் ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்த முன்னாள் கமிஷனர் நாரணவரே மனீஷ் சங்கர்ராவ் திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.