சென்னை. அக்டோபர்.22 எம்.ஜி.எம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் , “வாக் இன் பிங்க் @ நம்ம சென்னை” வாக்கத்தான் நிகழ்வு சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள எம்.ஜி.எம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டிலிருந்து அண்ணாநகர் டவர் பூங்கா வரை நடைபெற்றது.
இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன்
எம்.ஜி.எம் கேன்சர் இன்ஸ்டிடியூட் – ன் புற்றுநோயியல் சேவைகள் துறையின் இயக்குனர்டாக்டர். எம்.ஏ. ராஜா
மார்பக புற்றுநோயியல் பிரிவின் மருத்துவர் டாக்டர். வேதா பத்ம பிரியா மற்றும் டாக்டர். கீர்த்தி கேத்தரின் கபீர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
டாக்டர் எம்.ஏ.ராஜா செய்திகுறிப்பில் தெரிவித்ததாவது:-
இந்தியாவில் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக விழிப்புணர்வு பரப்புரை மற்றும் ஸ்க்ரீனிங் செயல்திட்டங்களும் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதன் அவசரத் தேவையை இந்த ‘வாக் இன் பிங்க் @ நம்ம சென்னை நடைபயணம் “வலியுறுத்துகிறது .
இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் முதிர்ந்த நிலைகளில் அல்லது உடலின் பிற பகுதிகளுக்கு பரவிய நிலையிலேயே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் இல்லாததையே காட்டுகிறது.
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், சுய மார்பக பரிசோதனை மற்றும் மேமோகிராஃபி உட்பட, மார்பக ஸ்க்ரீனிங் பரிசோதனை செய்யப்படுவதன் விகிதங்கள் மிக குறைவாகவே இந்தியாவில் இருக்கின்றன.
மார்பக புற்று நோயுடன் தொடர்புடைய பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பதும் மற்றும் குறித்த காலளவிற்குள் சுய பரிசோதனைகள் மார்பக ஆரோக்கியத்திற்கு தாங்களே பொறுப்பேற்பது அவசியம் என்பதால் தான் “வாக் இன் பிங்க் @ நம்ம சென்னை” வாக்கத்தான் நிகழ்வை எம்.ஜி.எம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறது என்றார்.



