ஈரோடு, அக். 22 –
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 182 மதுபானக்கடைகள் செயல்படுகின்றன. இந்தக் கடைகளில் தினமும் சுமார் ரூ. 6 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடந்து வருகிறது. இது தவிர ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தீபாவளி புத்தாண்டு போன்ற பல்வேறு பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று ஈரோடு மாவட்டத்தில் மது பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு முந்திய நாளான கடந்த 19 ம் தேதி ரூ.9 கோடியே 86 லட்சத்திற்கும் தீபாவளி அன்று 9 கோடியே 43 லட்சத்துக்கும் மது விற்பனையாகி உள்ளது. அதாவது கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ. 19 கோடியே 29 லட்சத்துக்கு மது பானங்கள் விற்பனையாகி உள்ளது.


