ஈரோடு, ஆகஸ்ட் 6 –
ஈரோடு பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன் வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களின் அறங்காவலர்களாக மதன் மோகன், மாதேஸ்வரன், ரவீந்திரன், கதிர்வேல் மற்றும் சமூக வடிவு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் அறங்காவலர் குழு தலைவராக மதன் மோகன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பெரிய மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் அஞ்சுகம், ஈரோடு மாவட்ட அறநிலையத்துறை தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அறங்காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் அமைச்சர் முத்துசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.